நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன பொதுமக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூர் அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் வாகன எரிபொருள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தை சேர்ந்த 4 பேர், எஸ்யூவி காரில் கரூர் வந்து வியாபாரத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணராயபுரம் அங்காளம்மன் கோயில் அருகில் அந்த கார் வந்து கொண்டிருக்கும்போது இன்ஜினில் இருந்து திடீரென்று புகை வரத் தொடங்கியது. இதனால் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் குருநாதன் காரை நிறுத்தி என்ன பிரச்சனை என்று சோதித்து பார்த்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து மளமளவென்று கார் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது.

இதனால் பதறிப்போன காரில் இருந்த விற்பனை பிரதிநிதிகள் உடனடியாக காரில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இதனால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்ததால் பொதுமக்கள் யாரும் அருகில் செல்லவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FIREACCIDENT, SUV, CAR, TRICHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்