'நீ வந்தாதான் தீபாவளி!';'அரசை குறை சொல்லாதீங்க!'; 'அபராதம் போடணும்!'.. சுஜித்துக்காக பேசிய பிரபலங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி ஆழ்துளைக் கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்று ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த், ‘இந்த விவகாரத்தில் அரசை குறைகூற கூடாது. மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் விடாமுயற்சியுடன்  ஈடுபட்டு வருகின்றனர். சிறுவன் சுஜித் நலமுடன் மீண்டு வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் இதுபற்றி கூறுகையில், ஆழ்துளைக் கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது ட்வீட்டில். 'நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு, எதற்காக இத்தனை கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.? பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய், பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு, பொறுத்துக்கொள் சாமி, விழித்துக்கொள் தேசமே’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘நானும் ஒரு குழந்தையோட தகப்பன், அந்த வகையில என்னால் சுஜித் பெற்றோரின் வலியை உணர முடிகிறது. நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி’ என ட்விட்டரில் ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்வீட்டில்,  ‘நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்க, தமிழ்நாட்டில் மட்டும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை நலமுடன் காப்பாற்றப்பட நான் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

SUJITH, SURJIT, PRAYFORSURJEETH, PRAYFORSUJITH, SAVESUJITH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்