தவறாக போடப்பட்ட ஊசி.. 22 வருசத்துக்கு அப்புறம் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, தவறான ஊசி செலுத்தபட்டதன் பெயரில் எழுந்த புகாரில், தற்போது தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இறந்த உடலை தோண்டி எடுத்ததுக்கு அப்புறம்.." மழை வர வைக்க வினோத சடங்கு.. பரபரப்பை உண்டு பண்ணும் கிராம மக்கள்

கடந்த 2000 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அன்று தமிழகத்தைச் சேர்ந்த எழிலரசி என்ற சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அருகேயுள்ள மருத்துவர் ஒருவரிடம் எழிலரசியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பின் ஊசியும் போட்டுள்ளார். அவர் ஊசி போட்ட பின்னர், சிறுமி எழிலரசிக்கு நரம்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உடலில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த விவகாரம், சிறுமியின் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியிருந்த நிலையில், அவர்கள் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். இது தொடர்பான  புகாரை விசாரித்த மாநில ஆணையம், எழிலரசிக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் தவறான சிகிச்சை முறை பற்றி அறிந்து கொண்டதுடன், அந்த சிறுமிக்கு நாலு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, மருத்துவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உத்தரவை எதிர்த்து மனு ஒன்றையும் மருத்துவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அது மட்டுமில்லாமல், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு சுமார் 6% வட்டியுடன், 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அந்த பெண்ணிற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரியகாந்த், ரவிக்குமார் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் அளித்த உத்தரவில், "நீதிபதிகள் ஒன்றும் மருத்துவ நிபுணர்கள் கிடையாது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் வழங்கி இருக்கக் கூடிய ;அறிக்கைகள் படி பார்த்தால், மருத்துவர் கவனக் குறைவுடன் இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனவே மனுவை உடனடியாக தள்ளுபடி செய்து, இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டு பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுமார் 22 ஆண்களுக்கு முன்பு, தவறாக ஊசி போட்டதன் பெயரில், பக்கவிளைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ராகுலுக்கு கல்யாணம்??.. இணையத்தில் வலம் வந்த தகவல்.. "என்னையும் கூப்பிடுவாங்க போல.." நடிகையின் வேற மாதிரி பதில்

SUPREME COURT, GIRL, INJECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்