சகோதரருடன் பூஜையில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்.. இதுதான் விசேஷமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது மங்களூருவில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருவதாக தெரிகிறது.

Advertising
>
Advertising

Image Credit : JSKGopi

இந்நிலையில் ரஜினிகாந்த்  மங்களூருவில் இருந்து பெங்களூருவில் உள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் வழிபாடு நடத்தியதாக தெரிகிறது. இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணனுடன்  காரில் சென்ற புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டானது.

குறிப்பாக குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் தனது மனைவி லதாவுடன் தியானத்தில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அங்கு அமர்ந்தபடி தியானம் செய்த புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமது அண்ணன் சத்ய நாராயணா ராவின் 80வது பிறந்த நாள் பூஜை நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படும், பூஜை தொடர்பிலான புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.



இதுகுறித்த ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில், "எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடிய மகிழ்ச்சியில்... என்னை இன்று ஆளாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்கிறேன் 🙏🏻.  இறைவனுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
 

 

ரஜினிகாந்த், சிவராத்திரி, RAJINIKANTH, SHIVARATRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்