‘வலிமை’ மோஷன் போஸ்டரை வச்சு சிறப்பான சம்பவம்.. ரசிகர்களிடையே வரவேற்பை அள்ளும் சென்னை எஸ்.பி ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பெருநகர குற்ற புலனாய்வு எஸ்.பி அர்ஜுன் சரவணன், வலிமை படத்தின் அஜித்குமார் போட்டோவை பதிவிட்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

‘வலிமை’ மோஷன் போஸ்டரை வச்சு சிறப்பான சம்பவம்.. ரசிகர்களிடையே வரவேற்பை அள்ளும் சென்னை எஸ்.பி ட்வீட்..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.

Superintendent of police Arjun Saravanan share Valimai Ajith photo

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டாலும், தற்போது வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டப்பட்டது. 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக  ‘வலிமை அப்டேட்’ கேட்டு வந்த ரசிகர்களுக்கு, திடீரென்று ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ஆச்சரியப்படுத்தியது.

தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் அஜித்குமார் தலைக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்தை, சென்னை பெருநகர குற்ற புலனாய்வு எஸ்.பி அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தலைக்கவசம், உயிர்க்கவசம்’ என பதிவிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்