ஃபீல் செய்த பூஜா குடும்பத்தினர்.. மன்னிப்பு கேட்ட டிஜே பிளாக்!!... கடைசில தான் Prank -ன்னு தெரிய வந்திருக்கு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எக்கச்சக்க ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

                           Images are subject to © copyright to their respective owners

ஃபீல் செய்த பூஜா குடும்பத்தினர்.. மன்னிப்பு கேட்ட டிஜே பிளாக்!!... கடைசில தான் Prank -ன்னு தெரிய வந்திருக்கு!!
Advertising
>
Advertising

பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் ஏராளமான மக்களும் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பெரிய அளவில் பிரபலமான ஒரு ஷோ ஆகும். இதுவரை சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் பல்வேறு சீசன்கள் முடிந்துள்ள சூழலில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் டிஜே பிளாக் என்பவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். எந்த நிகழ்ச்சி சென்றாலும் நடுவே டிஜே பிளாக் ஒளிபரப்பும் வசனங்களோ, பாடல்களோ பெரிய அளவில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் தான் இருக்கும்.

டிஜே பிளாக்

அந்த வகையில் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறங்கி உள்ள பூஜாவிற்கு பல ரொமான்டிக் பாடல்கள், பல ரொமான்டிக் வசனங்களை அவ்வப்போது தட்டி விடுவதில் வழக்கமாகக் கொண்டுள்ளவர் டிஜே பிளாக். இதனால் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறும் கலகலப்பான விஷயங்களும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.

பூஜாவுக்கு மட்டும் ஏன் இப்படி?

அந்த வகையில் இந்த வார இறுதியிலும் பாடுவதற்காக மேடைக்கு வந்த பூஜா, தமது குடும்பத்தினருடன் வந்து நின்றார். அப்போதும் பூஜாவுக்கு பாடல்கள் வந்தபோது பாடல்களையும் ரொமான்டிக் வசனங்களையும் தட்டி விட்டார் டிஜே பிளாக். ஆனால் இம்முறை பூஜாவின் குடும்பத்தினர், “ஏன் பூஜாவுக்கு மட்டும் இப்படி பாடல் போடுகிறீர்கள்?  மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. இந்த வருத்தத்தை சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது தேவையில்லை” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.


Images are subject to © copyright to their respective owners

மன்னிப்பு கேட்டுக்குறேன்

இதற்கு மேடைக்கு வந்து பதில் அளித்த டிஜே பிளாக், "எல்லா சூழ்நிலைலையும் இப்படித்தான் பண்ணுவேன். நீங்க இந்த நிகழ்ச்சி மட்டும் பாக்குறதுனால அப்படி தெரியலாம். மற்ற நிகழ்ச்சியையும் இப்படி தான் பண்றேன். உங்களை Offend பண்ணி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இனிமே நான் அப்படி பண்ண மாட்டேன் என தெரிவித்தார்.

பூஜாவின் குடும்பத்தினர் பேசியதும், பின்னர் அதற்கு டிஜே பிளாக் மன்னிப்பு கேட்ட விஷயமும் பெரிய அளவில் அங்கிருந்த நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையும் வைத்திருந்தது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பார்வையாளர்கள் கூட குழம்பி போயினர்.

அழுதுட்டு இருந்துருப்பேன் நானு..

அப்போது தான், "டிஜே சார், இது ஒரு பிராங்க்" என பூஜாவின் பெரியம்மா தெரிவிக்க, குழப்பத்தில் ஆழ்ந்த அனைவரும் ஒரு நிமிடம் சிரிக்க தொடங்கி விட்டனர். இப்படியா ஒரு மனுசனை பிராங்க் செய்வது என பார்க்கும் அனைவருமே கருதிய சூழலில் இது பற்றி பேசிய டிஜே பிளாக், "எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு தெரியல, ஆனா உண்மைய சொல்லுறேன். ஆண்ட்டி மட்டும் சீரியலுக்காக வந்தாங்கன்னா நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு.


Images are subject to © copyright to their respective owners

இன்னும் ரெண்டு நிமிஷம் நடந்திருந்தா அழுதுட்டு இருந்திருப்பேன். செம பதட்டம் ஆயிடுச்சு. ஏன்னா யாருமே இப்படி சொன்னதே இல்ல. இவ்ளோ நிகழ்ச்சி பண்ணி இருக்கோம். இப்படி நடந்ததே இல்ல" என தெரிவித்தார்.


Images are subject to © copyright to their respective owners

முன்னதாக, பலரும் பூஜாவின் குடும்பத்தினர் பேசியதை கேட்டு பதற்றம் அடைந்தாலும் பின்னர் பிராங்க் என தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டதும் குறிப்பிடத்தக்கது.

SUPER SINGER 9, DJ BLACK, POOJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்