எல்லாமே 'ஒரு' ரூபாய் துட்டு...! ஏன் டெபாசிட் பணத்த இப்படி கட்டுறீங்க...? - வேட்பாளர் கூறும் வியக்க வைக்கும் காரணம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்ற இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் 10000 ரூபாயை 1 ரூபாய் நாணயமாக கொடுத்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில் சூலூர் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் கட்சியின் சார்பாக பொன். கார்த்திகேயன் அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்து.

தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் வேட்புமனுவிற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன் பின் தன்னுடைய வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பொன் கார்த்திகேயன், டெபாசிட் பணமாக சுமார் ரூ.10,000-த்தை ஒரு ரூபாய் நாணயமாக கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், 'இதுவரை 10,000 பொதுமக்களிடம் தலா ஒரு ரூபாய் வசூல் செய்து வேட்புமனுத்தாக்கல் பணத்தை சில்லறையாக தாக்கல் செய்துள்ளேன். பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பணத்துக்காக விற்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்தேன்' எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 96 சதவீதம் இந்து மக்கள் வசிப்பதாகவும், அவர்களால் தான் வெல்ல போவதாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்