எல்லாரும் உள்ளப் போய் கதவை பூட்டிக்கிட்டாங்க...! ஒரு சின்ன 'டைமிங்' தான், மிஸ் ஆயிருந்தா...! பதபதைக்க வைத்த விவசாயி குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயி பெற்ற கடனுக்காக அவரின் சொத்தைப் போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகளால் அனைவரின் முன்னிலையிலும் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடனை திரும்பப் பெற வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான குடும்பம் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகிப் பார்ப்பவர்களை உறையச் செய்கிறது.

சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் வங்கியில் வாங்கியிருந்த கடன் தொகை கட்ட கால தாமதம் ஆகியுள்ளது. இதனாதால் அவரது சொத்தை வங்கி ஊழியர்கள் போலீஸார் துணையோடு ஈஸ்வரனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வந்துள்ளனர்.

நிலத்தை வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோர் சொத்தை பறிமுதல் செய்ய வந்த நிலையில், ஈஸ்வரனின் மனைவி சித்ரா, மகன் பிரபு அவரது மனைவி இசையமுது ஆகியோர் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து மிரண்டுப்போன போலீசார் விரைந்து சென்று குடத்திலிருந்த நீரை எடுத்து ஊற்றி அனைவரையும் காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சிவசுப்ரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஈஸ்வரன் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

BANKLOAN

மற்ற செய்திகள்