VIDEO: இது 'எனக்கு' கெடச்ச 'பெரிய' வாய்ப்பு...! 'தமிழில் அர்ச்சனை செய்து பணியை தொடங்கிய பெண் ஓதுவார்...' - சோசியல் மீடியாவில் 'டிரெண்டிங்' ஆகும் சுஹாஞ்சனா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.
இந்த நிலையில், தி.மு.க அரசின் 100-வது நாளான நேற்று (14-08-2021) அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் ஐந்து தலித்துகள் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த பணி நியமன ஆணையில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் சுஹாஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சுஹாஞ்சனா தேனுபுரீஸ்வர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்து தனது ஓதுவார் பணியைத் தொடங்கினார். இவர் தமிழில் 'சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இது குறித்து சுஹாஞ்சனா கூறும்போது, "ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மனம் நிறைந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணியின் மூலமாக இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும்.
எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு மிக்க நன்றி. என்னைப்போல் உள்ள பல பெண் ஓதுவார்களுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோயிலை சீரமைக்கும் போது கிடைத்த பழங்கால ‘வெள்ளி’ நாணயம்.. தீயாய் பரவிய தகவல்.. மளமளவென குவிந்த மக்கள்.. கடைசியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
- VIDEO: வரிசையாக வந்து ‘ஆசி’ வாங்கும் பக்தர்கள்.. புது வருசத்தின் ‘ஸ்டார்’ ஆன நாய்.. வைரலாகும் வீடியோ..!
- 'இராஜராஜ சோழன் என் ஃப்ரண்ட் தான்...' 'நான் இறந்து 1000 வருஷம் ஆச்சு...' இப்போ இந்த மண்ணுக்கடியில இருக்குற எனக்கு சொந்தமான 'அந்த' ஒண்ண பார்க்கணும்...! - ஆச்சரியப்படுத்திய நபர்...!
- திரையில் வில்லன்.. நிஜத்தில் ‘ஹீரோ’.. சோனு சூட்டுக்கு ‘கோயில்’ கட்டிய ரசிகர்கள்.. சிலை செய்த ‘சிற்பி’ சொன்ன உருக்கமான பதில்..!
- 'கோயிலை தோண்டியபோது கிடைத்த தங்க புதையல்’... ‘அரசிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம்’...!!!
- தேங்கிய மழைநீரால் தெரியவந்த ‘ஆச்சரியம்’.. வியக்க வைத்த 800 ஆண்டு பழமையான ‘சோழர்’ காலத்து கட்டுமானம்.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிகள் தீவிரம்..!
- 'மனசே பொறுக்கல...' ஆஞ்சநேயர் கோயிலுக்கு போக வழி இல்லையே...! 'ஒரு கோடி மதிப்புள்ள சொத்தை...' - மதம் கடந்து இஸ்லாமியர் செய்த காரியம்...!
- 'கோவில் குடமுழுக்கு விழாக்களில்’... ‘இனிமேல் தமிழ் மொழியிலும்’... ‘உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி’...!!!
- 'திடீர்னு தீப்புடிச்சு எரிந்த கோயில் மரம்...' 'மரம் தீப்பிடித்தது குறித்து கூறப்படும் காரணம்...' - அதிர்ச்சியில் பக்தர்கள்...!