திடீரென வீட்டு ஹாலில் 'டைல்ஸ்' உடையுற சத்தம்...! 'சிமெண்ட் வச்சு அடைக்குறதுக்குள்ள...' - கண்ணீர் வடிக்கும் வீட்டு உரிமையாளர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கிகொண்டிருக்கும் நிலையில் ஒரு வீட்டிற்கு கீழே ஆறு மாதிரி தண்ணீர் சென்றுகொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையாகப் பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை இழந்தும், பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ஜெகதீஷ் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழே வெள்ள நீர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்த ஒருவர் இதுகுறித்து கூறும் போது, 'எங்களின் குடியிருப்பில் மொத்தம் ஏழு வீடுகள் உள்ளது. அதில் குடியிருப்பின் கீழ் பகுதியில் தான் வீட்டின் உரிமையாளர் உள்ளார். அப்போது நவம்பர் 28ஆம் தேதி அன்று  மாலை நான்கு மணி அளவில் உரிமையாளர் வீட்டின் ஹால் ரூமின் தரையில் (டைல்ஸ்) விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் வீட்டின் உரிமையாளர் வைட் சிமெண்ட் கொண்டு அதனை அடைத்துக்கொண்டிருந்த போது அந்த விரிசல் மேலும் பெரிதாகியுள்ளது. அப்போது உரிமையாளர் மனைவி விரிசலுக்கு பக்கத்தில் இருந்த போது உரிமையாளர் மனைவியைப் பின்னோக்கி இழுத்துள்ளார்.

அடுத்த நிமிடமே வீட்டின் நடுவில் பெரும் சத்தத்துடன் அந்த டைல்ஸ் உடைந்து பூமியின் அடியில் விழுந்து பள்ளம் ஏற்பட்டு அதன் அடியில் வெள்ள நீர் ஓடியுள்ளது' எனக் குறிப்பிடுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தை ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும் பார்த்துவிட்டுச் சென்றுள்ளதாக கூறியுள்ளனர். அதோடு, மண் பரிசோதனை செய்ய ஆட்களை அனுப்பியுள்ளதாகவும், ஆய்வு செய்து ஆய்வின் முடிவுக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு குடிவரலாம் அதுவரை வரவேண்டாம் என ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் கூறும் போது, 'நான் மாநில கல்லூரியில் 30 வருடங்களாகப் பேராசிரியராக பணியாற்றியுள்ளேன். இந்த வீடு என் ஒட்டுமொத்த உழைப்பின் சன்மானம்.இப்போது அந்த வீட்டில் தங்க கூட முடியவில்லை.

எனக்கு திருமண வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை' என ஆதங்கமாகத் தெரிவித்தார்.

URAPAKKAM, GROOVE, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்