'கண்டிப்பா இங்க போட்டின்னா அது...' ரஜினிக்கும் 'அவங்களுக்கும்' தான்...! - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினிகாந்த் அவர்கள் தான் கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என இன்று தன் போயஸ்கார்டன் வீட்டின் முன் டிசம்பர் 31-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக அறிவித்திருக்கும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் அர்ஜுனன் என்பவர் தன் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் அவர்களை மேற்பார்வையாளராகவும் நியமித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, இதுகுறித்து தன் கருத்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'ரஜினி அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என நீடித்து வந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அநேகமாக ரஜினிகாந்திற்கும் சசிகலாவிற்கும் இடையே தான் போட்டி இருக்கும். பாஜக ஒரு குழப்பத்தில் நிலையில் இருக்கும்' என டீவ்ட் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் தான் ஆன்மீக அரசியலை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இன்னும் தன் கட்சியின் பெயரையும், அதன் கொள்ளைகளையும் வெளியிடாத நிலையில் இந்த அறிவிப்புகளும் சீக்கிரம் தெரிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

ரஜினியின் இந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரஜினி தனித்து போட்டிடுவாரா? கூட்டணி அமைப்பாரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்