'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பல திட்டங்களை, தேர்தல் வாக்குறுதிகளாக திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

                                    students with 7 5 percent allocation in medical courses

கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தின் நடுவில் பேசிய முதல்வர், தமிழக மக்கள் பயனடையும் வகையில் அதிமுக அரசு செயல்படுத்தி திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.

                                 

மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கியது குறித்து முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 

                             

இந்த உள்ஒதுக்கீடு மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதளவில் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்