பாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்!.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்!.. செம்ம ஹைலைட் 'இது' தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல்லில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.

கொரோனா பரவலால் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறதா நிலையில், பத்தாம் வகுப்ப மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, கல்லூரி மாணவர்களும் தேர்வெழுத முடியாத நிலை இருந்ததால், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதித்தேர்வு தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

அரியர் தேர்வுக்குப் பணம் கட்டி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே பாஸ் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அதிகம் பேர் டிகிரியை முடிப்போமா நம் பெயருக்கு பின்பு ஒரு டிகிரியை போடுவோமா என அதிக அளவில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வந்த இந்த அறிவிப்பால் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆனந்த கூத்தாடினர்.

இந்த சந்தோஷமான அறிவிப்புக்கு காரணமான தமிழக முதல்வருக்கு போஸ்டர் மூலமும் வலைதளங்களின் மூலமும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் நகர் முழுவதும் மாணவர்களின் பாகுபலியே அரியரை வென்ற அரசனே என முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

             

மேலும், கோவை மாநகர் முழுவதும் மாணவர்களின் ஒளிவிளக்கே, மாணவர்களின் கல்விக்கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி தனியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள்  போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்