‘சாரை போக விடமாட்டோம்’.. கட்டிப்பிடித்து ‘கதறியழுத’ மாணவர்கள்.. பெற்றோர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆசிரியரின் பணி மாறுதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் உதவி ஆசிரியராக ரவிச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.

ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்காக இருவரையும் வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து பள்ளிக்கு வந்த ரவிச்சந்திரன், தனது பணி மாறுதல் செய்தியை மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மாணவர்கள் ஆசிரியரை பிரிய மனமில்லாமல் அவரை கட்டித்தழுவி கதறி அழுதனர். மேலும் அவரை வேறு பள்ளிக்கு போக விடமாட்டோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே ஆசிரியர் ரவிச்சந்திரன் பள்ளியை விட்டுச் செல்வது அறிந்த மாணவர்களின் பெற்றோர், அவர் இப்பள்ளியில் பணியாற்றுவதால்தான் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறோம் என தற்போதைய தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவரே வேறு பள்ளிக்கு செல்வதால், எங்களது பிள்ளைகளையும் வேறு பள்ளிக்கு மாற்ற போவதாக மாணவர்களை உடனே வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியருக்காக மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் இந்த முடிவை எடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCHOOLSTUDENT, STUDENTS, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்