ஒரே உத்தரவு.. பள்ளி கல்வித்துறைக்கு சபாஷ்.. மிகப்பெரிய சாதனை படைத்த அரசு பள்ளிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒருசில தனியார் பள்ளிகளில் கொரோனா காலத்தில் முழு கட்டணத்தை செலுத்த வலியுறுத்தியது. இதனால் வருவாய் இழப்பில் இருந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். அந்த வகையில், ஒன்று முதல் +2 வரை 53 லட்சத்து  24 ஆயிரம் மாணவ- மாணவியர் சேர்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

இது கடந்த வருடத்தை காட்டிலும் 6 லட்சத்து 73 ஆயிரம் கூடுதல் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் 6200 ஆகும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஏற்ற விதமாக அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் ஆசிரியர்கள் அடிக்கடி போராட்டத்தில் கலந்துக் கொள்வதாலும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்தாக சில பெற்றோர் கூறியுள்ளனர்.

கொரோனா காலம்:

அதுமட்டுமல்லாமல், கடந்த 2020-இல் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், பள்ளிகள் மூடப்பட்டது. அந்த சமயத்தில் தனியார் பள்ளிகளும் மூடப்பட்டது. தற்போது பள்ளிகள் திறந்தபோது, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கட்டாமல் விடப்பட்ட கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு:

அதன்பேரில் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில், தவணை முறையில் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. ஆயினும் முழுமையான தொகையை செலுத்த வேண்டும் என்று ஒரு சில தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

பொருளாதார சரிவு:

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காலகட்டத்தில் அனைத்து துறைகளும் நேரடியாக பாதிக்கப்பட்டது. இதனால் நடுத்தர குடும்பங்கள் பொருளாதார பின்னடவை சந்தித்தன. ஆகவே கல்விக் கட்டணத்தை கட்ட முடியாத சூழலுக்கு பகலா குடும்பங்கள் தள்ளப்பட்டன. எனவே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் கொண்டு போய் சேர்த்தனர்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண பாக்கி வைத்துள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க கூடாது எனவும், அந்த வகை மாணவர்களுக்கு மாற்றுச் சான்றுகளை (TC) வழங்க முடியாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆயினும், மாற்று சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டது.

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம்:

இந்த நிலையில்,  இந்த கல்வி ஆண்டில் மட்டும் முதல் வகுப்பில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 285 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஒட்டுமொத்தமாக 53 லட்சத்து 24 ஆயிரம் மாணவ மாணவியர் தற்போது வரையிலும் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆய்வகங்கள் முதல் கல்விக்கு தேவையான அடிப்படை கட்டுமானங்கள் அரசு பள்ளிகளில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் ரூம் உட்பட உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு உள்ளதால் முன்பு போல் பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்.

STUDENTS, GOVT SCHOOLS, DPI, மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்