'அடுத்தடுத்து' காணாமல் போகும் 'இளம் பெண்கள்'... 'சினிமாவை' விஞ்சும் அதிர்ச்சி 'சம்பவங்களால்'.... 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'நெல்லை' மக்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து மாணவிகள் காணாமல் போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அடைய கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி நாச்சியார் என்ற 20 வயது இளம் பெண் திருப்பூரில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 22ம் தேதி வீட்டிற்கு வந்த நாச்சியார் மீண்டும் திருப்பூருக்கு கிளம்பியுள்ளார்.

ஆனால் அவர் அதன் பிறகு திருப்பூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் சிங்கை போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல் மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்த பூமிகா என்ற 17 வயது சிறுமி சோலைசேரி பகுதியில் கல்லூரியில் படித்து வந்தார், கடந்த 9ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் ரசிதா மானூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவமும் இதே பகுதியில் நடைபெற்றுள்ளது. மானூர் அருகே உள்ள குப்பனாபுரத்தைச் சேர்நத் முத்துச்செல்வி என்ற 16 வயது சிறுமி பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வந்தார். தேர்வுக்காக வீட்டிலிருந்து நேற்று படித்துச் கொண்டிருந்தவரை திடீரென காணவில்லை. எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் இசக்கியம்மாள் மானூர் போலீசில் புகார் செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் சினிமாவை விஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து இளம் பெண்கள் காணாமல் போவது பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

THIRUNELVELI, THREE, YOUNG GIRLS, MISSING, POLICE, INVESTIGATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்