'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரையாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தன்னுடைய நண்பர்களான 8-ம் வகுப்பு மாணவர்கள் மகாதேவன், விக்னேஷ், மற்றும் 7-ம் வகுப்பு மாணவர் கிஷோர்குமார் ஆகியோருடன் அரையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று மாலை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கடலில் குளிக்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்.

மாணவர்கள் 4 பேரும் சேர்ந்து கடலில் ஜாலியாக குளித்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ராட்சச அலை ஒன்று எழும்பி வந்தது. அப்போது வினோத்தும், மகாதேவனும் எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி அலறினார்கள். நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு இருவரையும் காப்பாற்ற முயன்ற விக்னேஷ் மற்றும் கிஷோர் குமாரும் ராட்சத அலையில் சிக்கினர்.

இதையடுத்து மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், விக்னேஷ், கிஷோர்குமார் இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர். ராட்சத அலையில் சிக்கிய வினோத் உடல் சிறிதுநேரம் கழித்து அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவர், நீரில் மூழ்கி பலியாகி விட்டார். ஆனால் மற்றோரு மாணவரான மகாதேவனை காணாததால், அவரை மீனவர்களின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகிறார்கள். விடுமுறையை கொண்டாட சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, SCHOOLSTUDENT, CHENNAI, DEAD, GIANT WAVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்