செருப்பை கழட்ட 'சொன்ன' விவகாரம்... 'அமைச்சர்' மீது நடவடிக்கை எடுங்க... காவல் நிலையத்தில் 'புகாரளித்த' சிறுவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்று காலை முதுமலை முகாமில் யானைகள் புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது அங்கிருந்த கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலில் இருந்த செருப்புகளை, அருகில் இருந்த பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் கழட்ட சொன்னார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அமைச்சரின் இந்த செயலுக்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சீனிவாசன் பேரன் வயது கொண்ட அந்த சிறுவர்களை அழைத்ததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மசினகுடி காவல் நிலையத்தில் அந்த சிறுவன் புகார் அளித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்