'பரபரப்பாகும் அரசியல் களம்'... 'பிப்ரவரி 15க்குப் பிறகு தேர்தல் தேதி'?... வெளியான முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதி பிப்ரவரி 15க்கு பிறகு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு பயன்படுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் சட்டசபைத் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காலை சென்னை வந்தார். பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்தனர். அப்போது சட்டசபை பொதுத்தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அறிந்தனர்.

இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடங்கிய தேர்தல் ஆணையக் குழு, பிப்ரவரி 10-15 தேதிகளில் ஆறு நாட்கள் - தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்கிறது. அதன் பிறகு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சென்றதும் விரிவாக ஆலோசித்துத் தேர்தல் தேதியை முடிவு செய்கிறார்.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு தொடங்கும் மே 1க்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலை முடிக்கத் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்து  உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்