"முதல் ஸ்டேஜ் ஏறுன பிறகு தேம்பி தேம்பி அழுதேன்".. Standup Comedian பிரவீன் உருக்கம்!!.. சிரிக்க வைக்குறதுக்கு பின்னாடி இவ்ளோ கஷ்டம் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டத்தில் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பல இடங்களில் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஏராளமானோர் அரங்கிற்கு வருகை தந்து சிரிப்பலையில் மிதக்கவும் செய்வார்கள்.

Advertising
>
Advertising

மேலும் இதன் காரணமாக, பல ஸ்டான்ட் அப் காமெடியன்களும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில், பல ஆண்டுகளாக ஸ்டான்ட் அப் காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளவர் பிரவீன். தனக்கே உரித்தான பாணியில் காமெடி செய்து கலக்கும் பிரவீன், சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

அப்போது, தான் முதலில் காமெடி செய்த அனுபவம் பற்றி பேசியிருந்த ஸ்டான்ட் அப் காமெடியன் பிரவீன், "ரொம்ப மோசமா இருந்தது. 2008 டிசம்பர் 6 ஆம் தேதி காலேஜ் அலுமினா டைம்ல, அத மறக்கவே முடியாது. ஸ்டேஜ் ஏறி ஜோக் சொல்றேன்.  பயங்கரமான ஜோக், ஆனா ஆடியன்ஸ் வந்து அப்படியே பாத்துட்டு இருக்காங்க. இத்தனைக்கும் எனக்கு தெரிஞ்சவங்க.

இவன் என்னடா பண்றான்குற மாதிரி பாத்துட்டு இருந்தாங்க, நிறைய பேர் சிரிக்க ஆரம்பிச்சாங்க. ஜோக்குக்காக இல்ல, என்னடா இவன் பண்ணிட்டு இருக்கான்னு எனக்காக. அது ரொம்ப மோசமா போய், அஞ்சு நிமிஷம் மேல தொடர முடியாம இறங்கிட்டேன். அப்புறம் பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க, மச்சி இது உனக்கு செட் ஆகலன்னு.

Images are subject to © copyright to their respective owners

இதே மாதிரி 2009 ல ஒரு Thanks Giving மீட்ல போனேன். அது மத்தியானம் ஷோ, லஞ்சு முடிச்சுட்டு எல்லாரும் வந்திருந்தாங்க. நான் ஸ்டேஜ் ஏறி காமெடி பண்றேன், ரொம்ப மயான அமைதியா இருந்துச்சு. அதுக்கப்புறம் என்னென்னமோ ரெண்டு, மூணு ஜோக்ஸ் எல்லாம் முயற்சி பண்ணேன்.

அப்பவும் அமைதியா தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் கைத்தட்ட ஆரம்பிச்சாங்க, எதுக்குன்னா, ஜோக்குக்காக இல்ல என்னை நிறுத்துறதுக்கு. கைத்தட்டிட்டே இருக்காங்க நிறுத்தல, எனக்கு எப்படி ஹாண்டில் பண்ணனும்னு தெரியல. அதுக்கப்புறம் முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் பலூன் ஊதி உடைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நான் அப்புறம் நேரா ஓடிப்போய் காசு கூட வேணாம்னு சொல்லிட்டு தேம்பி தேம்பி அழுதேன். அப்போ மனைவி, அப்பா, அம்மா எல்லாரும் தான் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்து என்னை ஊக்கப்படுத்துனாங்க" என பிரவீன் தெரிவித்தார்.

STAND UP COMEDY, PRAVEEN

மற்ற செய்திகள்