'கான்வாய்ல இத கட் பண்ணுங்க'...'இப்படி ஒரு அசத்தல் அறிவிப்பா?'... 'முதல்வர் ஸ்டாலின்' எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வரின் பாதுகாப்பை, கோர் செல் (Core Cell) எனப்படும் முதல்வரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்குச் சென்றாலும் அவரின் பாதுகாப்பிற்காகப் பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தின்போது அவரது பாதுகாப்பிற்கும் அவசர தேவைகளுக்காகவும் 12 கான்வாய் வாகனங்கள் அவருடன் பயணிக்கும்.

இந்நிலையில், இந்த எண்ணிக்கையைப் பாதியாகத் தமிழக அரசு குறைத்துள்ளது. இனி 12 வாகனங்களுக்குப் பதிலாக 6 கான்வாய் வாகனங்கள் மட்டுமே முதல்வரின் வாகனத்துடன் பயணிக்கும்.  இதேபோல், முதலமைச்சரின் பயணத்தின்போது பொதுமக்கள் வாகனத்தைத் தடுக்காமல், முதலமைச்சரின் வாகனத்தோடு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் இந்த முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்