'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேட்டுப் பாளையத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி அகற்றப் படாமல் இருந்துள்ளது, 20 நாள்கள் கழித்து தெரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கோவையின் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - மலர்விழி தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலர்விழிக்கு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி, குழந்தை பிறந்த அடுத்த நாளான 21-ஆம் தேதி போடப்பட்டது. 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் மலர்விழி. ஆனால் வீட்டுக்குச் சென்று குழந்தையினை , மலர்விழி குளிப்பாட்டும்போது, அவரது கைகளில் ஏதோ பட்டு கையில் ரத்தம் வரவே, சந்தேகப்பட்டு என்னவென்று பார்த்திருக்கிறார்.
அப்போதுதான், குழந்தையின் இடது கை மற்றும் இடது தொடையில் போடப்பட்ட தடுப்பூசிகளில், குழந்தையின் இடது தொடையில் போடப்பட்ட தடுப்பூசியை செவிலியர்கள் கவனக்குறைவால், அகற்றாமல் விட்டுவிட்டதைக் கண்டு மலர்விழி அதிர்ந்தார். இதன் காரணமாகத்தான் குழந்தையின் தொடையில் வீக்கம் உண்டானதோடு, நாளடைவில் வீக்கம் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
அதன் பின்னர் மேட்டுப்பாளையம அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடமும், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏனையோரிடமும் மலர்விழியின் தரப்பில் இருந்து, செவிலியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..
- ‘குடிபோதையில் பைக்கில் சென்ற இளைஞரின்’.. ‘நெஞ்சை துளைத்த கம்பி’.. ‘போராடி உயிர் கொடுத்த மருத்துவர்கள்’..
- 'பிஞ்சு குழந்தைய பாக்க ஆசையா இருந்தாரு'....'தாய்க்கும் சிசுவுக்கும் நேர்ந்த கொடூரம்'...உறைந்து நின்ற கணவர்!
- ‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!
- ‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..!
- ‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..!
- ‘பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்’.. ‘தனியார் மருத்துவமனையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- ‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு நேர்ந்த சோகம்’!