'என்ன எப்படி ஏளனமா பேசுனீங்க'... 'இப்போ எடப்பாடி ஐயா என்ன செஞ்சாரு பாத்தீங்கல'... தெறிக்கவிட்ட மாணவனின் போஸ்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துப் போட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றதால் இறுதியாக 10ம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சிபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அதில் ஒரு மாணவர் ஒரு படி மேலே சென்று, தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் போஸ்டர் அடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியை சேர்ந்த மாணவர் நிஷாந்த். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், தனது முகநூல் பக்கத்தில் ‘10-ம் வகுப்புத் தேர்வில் என்னைத் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்