வாங்குன கொஞ்ச நாள்லயே ரிப்பேரான புது போன்.. புகார் கொடுத்த வாடிக்கையாளர்.. ஸ்ரீவில்லிப்புத்தூர் நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாங்கிய புது செல்போனில் உள்ள குறைபாட்டை சரிசெய்து கொடுக்காத செல்போன் கடைக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சிவச்சந்திரகுமார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அந்த செல்போன்  வேலை செய்யாமல் போயுள்ளது.

உடனே செல்போன் வாங்கிய கடையிலேயே மீண்டும் கொண்டு கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் செல்போனில் உள்ள குறையை சரிசெய்து கொடுக்க தாமதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பலமுறை நேரில் சென்று அணுகியும் குறைபாட்டை சரிசெய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிவசந்திகுமார் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செல்போனை விற்பனை செய்த தொகை ரூ.11,500 மற்றும் புகார் தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.20,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3,000 ஆகியவற்றை கொடுக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட செல்போன் விற்பனை நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகைகளை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்:
http://behindwoods.com/bgm8

SMARTPHONE, SRIVILLIPUTHUR, COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்