‘பல ஆண்டுகளாக மூடியிருந்த’... ‘ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை’... ‘வாங்கிய பிரபல நிறுவனம்’... ‘திரும்பவும் உற்பத்தி துவக்கம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்ரீ பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை, சார்ஜர் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

செல்ஃபோன் சந்தையில் கோலாச்சிய நோக்கியா நிறுவனம், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 2006-ல் ஆலையை உருவாக்கி உற்பத்தியை தொடங்கியது. இதனால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். ஆனால், தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கலால், இந்த ஆலை மூடப்பட வேண்டியதிருந்தது. இதையடுத்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் நடத்தியபோது, 850 ஊழியர்களை கொண்டு ஆலையை நடத்தியது.

பின்னர் அந்த நிறுவனமும் கைவிட, நோக்கியா ஆலை கடந்த 2014 நவம்பர் 1-ம் தேதி நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் வேலை வாயப்பு நின்றுபோனது. இந்நிலையில், ஆப்பிள் ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும், பின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் ஏற்று நடத்த முன்வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, ‘ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உள்ளூர் விற்பனைக்கும்  அனுப்பப்படும்.

மேலும் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் இந்த நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்கும். இதனால் நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக 50,000 பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்’ என்றார். இதனால் மீண்டும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

NOKIA, SALCOMP, APPLE, CHARGER, JOB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்