விநாயகர் கண் திறந்ததாக பரவிய தகவல்.. ஆலயம் முன்பு குவிந்த பக்தர்கள்.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டம் பொன்னையில் உள்ள  ஸ்ரீபொன்னன் கணபதி ஆலயத்தில் விநாயகர் திடீரென கண் திறந்தார் என்ற தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Advertising
>
Advertising

விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும்
அதிகமாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். இந்துக்களின் புராணங்களில் விநாயகர் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகனின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இந்நிலையில், விநாயகர் கண் திறந்தார் என்ற அதிசயம் தான் மக்களின் பேச்சாக இருக்கிறது.

வேலூர் மாவட்டம் பொன்னையில் ஸ்ரீ பொன்னன் கணபதி ஆலையம் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள விநாயகர் திடீரென கண் திறந்து விட்டதாக அப்பகுதி மக்களுக்கும், ஆலய பணியாளர்களுக்கும் தகவல் வெளியானது. இதுதொடர்பான தகவல் காட்டுத் தீ போல் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆலயம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மண்ணுக்கடியில் புதைச்சு வச்சிருந்த ஒரு பெட்டி.. பக்கத்துலயே இன்னொரு இடத்த தோண்டி பார்த்தப்போ.. 'ஷாக்' கொடுத்த குடும்பம்!

 

விநாயகர் கண் திறந்த அதியசயத்தை காண காத்திருந்த பக்தர்கள் மனம் உருக வழிபாடுநடத்தி சென்றனர். கொரேனா காலத்தில் இதுபோன்ற செய்திகள் பரவுவது ஆபத்து என்றாலும், கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்க எதிர்பார்க்கலை வீட்டில் இருந்தோம் அப்போது காதுபட விநாயகர் கண் திறந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் என பக்தர் ஒருவர் கூறினார்.

மாரியம்மன் கண் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. வேலூர் காட்பாடி அருகே உள்ள செங்குட்டை பஜனை கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கண் திறந்ததாக செய்திகள் வெளியானது. இதேபோன்று இந்த அதிசயத்தை காண பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். கூட்டம் கூட்டமாக ஆலயம் முன் குவிந்து, தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபாடு செய்தனர்.

எங்க நாட்டுல ‘ஒமைக்ரான்’ பரவுனதுக்கு காரணமே.. வெளிநாட்டுல இருந்து வந்த அந்த ‘பொருள்’ தான்.. புது குண்டை தூக்கிப்போட்ட சீனா..!

 

ஐயப்பன் கண் திறப்பு

கோவை செல்வபுரம், தில்லை நகரில் மணிகண்ட சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் 40வது மண்டல பூஜை நடைபெற்றபோது ஐயப்பன் கண் திறந்ததாக செய்தி வெளியாகி பலரும் சாமி தரிசனம் செய்தனர். ஒரு படி மேல சென்று ஐயப்பனை புகைப்படம் எடுத்து சமூவலைதளங்களில் பதிவிட்டனர்.

 

இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் பால் குடித்ததாக கூறப்பட்ட தகவல் வைரலாக பரவியது.  இந்த நிலையில் விநாயகர் கண் திறந்தார் என்ற செய்தியும் வைரலாக பரவி வருகிறது.

GANESHA, VELLORE, DEVOTEES, விநாயகர், பக்தர்கள், வேலூர் மாவட்டம், ஸ்ரீபொன்னன் கணபதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்