அமைச்சர் உதயநிதிக்காக தயார் செய்யப்பட்ட அறை.. தலைமை செயலகத்தில் நடைபெற்ற விறுவிறு பணிகள்.. என்னென்னெ இருக்கு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதனையடுத்து அவருக்காக தமிழக தலைமை செயலகத்தில் புதிய அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார்.

இதற்கு மத்தியில், கடந்த ஒரு சில தினங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.

பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக தலைமை செயலகத்தில் புதிய அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறை 1000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்முக உதவியாளருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் கொண்ட அறையில், சிறிய கூட்ட அரங்கு, ஓய்வறை, அமைச்சரை சந்திக்க வரும் விருந்தினருக்கு சிற்றுண்டி தயார் செய்ய சிறிய சமையல் அறை, கழிப்பறை வசதிகள் உள்ளன.

அனைத்து அறைகளிலும் ஏர் கண்டிஷன் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறையில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

UDHAYANIDHI, MINISTER, SECRETARIAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்