'என்ன பிடிக்கவே முடியாது'... 'சவால் விட்ட பப்ஜி மதன்'... 'சுற்றிவளைத்து தூக்கிய 'தனிப்படை போலீசார்'... போலீசாரின் காலில் விழுந்து மதன் சொன்ன தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைமறைவாக இருந்த பப்ஜி மதனைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாகச் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாகச் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி இந்த புகாரை அளித்து இருந்தார்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரது யூடியூப் சேனலையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பெண்களுடன் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியது தெரிய வந்தது.

பெண்களிடம் அந்தரங்க வி‌ஷயங்களையும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோக்களையும் யூடியூப் சேனலில் மதன் தொடர்ந்து பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. பொறியியல் பட்டதாரியான பப்ஜி மதனின் முழு பெயர் மதன்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர் தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து யூடியூப் சேனல்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா முக்கிய மூளையாகச் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

பப்ஜி மதனைப் பிடிப்பதற்காகப் பெங்களூரில் முகாமிட்டிருந்த  தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தருமபுரியில் பதுங்கி இருந்த மதனைத் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாரின் காலில் விழுந்த மதன் தான் செய்தது தவறு என கதறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்