'பாலியல் தொல்லை புகார்...' 'சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...' - தமிழக அரசு உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தற்போது அவரின் பதவியிலிருந்து தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சந்தித்தபோது காரில் ஏறச்சொல்லி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த பாலியல் வழக்கில் தமிழக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பலரும் குரல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டதுள்ளது.
மேலும், டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டு ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டதுள்ளது. மேலும், கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பார்க்க டிப் டாப் லுக், சொகுசு கார்'... 'கொஞ்சம் இந்த அட்ரஸ் மட்டும் சொல்லுங்க'... திருப்பூரை அதிரவைத்த 3 இளைஞர்கள்!
- ‘யாருமே முன்வரல’!.. கல்யாணம் முடிஞ்ச கையோடு செஞ்ச ‘முதல்’ காரியம்.. புதுமண ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!
- VIDEO: 'இத அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல...' 'அபராதம் தான் வாங்க பக்கத்துல வரார்னு பார்த்தா, டக்குன்னு...' - ஆனா சிசிடிவி வீடியோல வசமா சிக்கிட்டார்...!
- ‘இந்த கல்லை வீட்டுல வச்சா நல்லது நடக்கும்’!.. புகழ்பெற்ற ‘மலை’ கற்களை ஆன்லைனில் விற்ற நபர்.. சென்னை வந்து கைது செய்த உத்தரபிரதேச போலீஸ்..!
- விருந்தாளி போல் திருமணப் ‘பத்திரிக்கை’ கொடுக்க வரும் கும்பல்.. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான் டார்கெட்.. பதற வைத்த சம்பவம்..!
- கூலித் தொழிலாளியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த ரூ.1 கோடி.. ‘ஆனா இது அவருக்கே தெரியாது’!.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- ‘யுவராஜ் சிங் மீது போலீசார் FIR பதிவு’!.. கடந்த வருசம் சர்ச்சையான இன்ஸ்டாகிராம் ‘சேட்டிங்’ விவகாரம்.. பரபரப்பில் கிரிக்கெட் வட்டாரம்..!
- ‘கடவுள் என் கனவுல வந்து சொன்னார்’!.. சத்தமில்லாமல் பெண் செய்த விபரீத காரியம்.. மிரண்டுபோன அக்கம்பக்கத்தினர்..!
- ஆபாச வீடியோக்களை படம்பிடித்து... இணையத்தில் பதிவேற்றிய வழக்கில்... பிரபல நடிகை கைது!.. உறையவைக்கும் பகீர் பின்னணி!
- குடும்பத்துடன் கேரளாவுக்கு ‘டூர்’.. கவர்ச்சி நடிகை ‘சன்னி லியோன்’ மீது பரபரப்பு புகார்.. போலீசார் தீவிர விசாரணை..!