“கல்நெஞ்சக்காரர்...” கலெக்டரை ஜாலியாக கிண்டல் செய்த எஸ்பி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ட்விட்டரில் மாணவருக்கு அளித்த பதிலுக்கு, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி குறும்பாக கமெண்ட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

தென்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதனால் இன்று (26.11.2021) விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவிக்கும் முன்னரே மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியிடம், ட்விட்டரில் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ‘சார் விருதுநகரிலும் பலமாக மழை பெய்கிறது..’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கலெக்டர் மேகநாத ரெட்டி, ‘லீவுக்காக நீங்கள் தொடர்ந்து நடத்திய பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் ஊரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது தம்பி. அதனால் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடியுங்கள். ஆசிரியர்கள் பரிசோதிப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என பதிலளித்துள்ளார்.

இதற்கு திருவள்ளுவர் மாவட்ட எஸ்பி வருண் குமார், ‘கல்நெஞ்சக்காரர்’ எனக்கு சிரிக்கும் எமோஜியுடன் குறும்பாக பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

RAIN, VARUNKUMAR, VIRUDHUNAGAR, COLLECTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்