‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்’!.. தூத்துக்குடி, நெல்லை முக்கிய ரயில்கள் ரத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி, நெல்லைக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 6, 13, 20-ம் தேதிகளில் இயக்கப்பட இருந்த எழும்பூர்-தூத்துகுடி (NO:06003) சிறப்பு கட்டண ரயில், ஏப்ரல் 7, 14-ம் தேதி தூத்துகுடி-எழும்பூர் (NO:82604) சுவிதா சிறப்பு ரயில் மற்றும் 21ம் தேதி இயக்கப்பட இருந்த தூத்துக்குடி-எழும்பூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல், வரும் ஏப்ரல் மாதம் 8, 15-ம் தேதி தாம்பரம்-நாகர்கோவில் (NO:06005) இடையே இயக்கப்பட இருந்த ரயில், நாகர்கோவில்-தாம்பரம் (NO:06006) இடையே 9, 16ம் தேதி இயக்கப்பட இருந்த ரயில், நெல்லை-தாம்பரம் (NO:06036) இடையே 2, 9, 16-ம் தேதி இயக்கப்பட இருந்த ரயில், தாம்பரம்-நெல்லை (NO:06035) இடையே 10, 17-ம் தேதி இயக்கப்பட இருந்த ரயில் மற்றும் 3ம் தேதி தாம்பரம்-நெல்லை (NO:82615) இடையே இயக்கப்பட இருந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஏப்ரல் 6, 19-ம் தேதி நாகர்கோவில்-தாம்பரம் (NO:06064) இடையே இயக்கப்பட இருந்த ரயில், நாகர்கோவில்-தாம்பரம் (NO:82624) 12ம் தேதி, தாம்பரம்-நாகர்கோவில் (NO:06063) 3, 10ம் தேதி, நெல்லை-எழும்பூர் (NO:82602) 5, 12ம் தேதிகளில் இயக்கப்பட இருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்