'சென்னை மக்களே'...'புறநகர் ரயிலில் வரப்போகும் அதிரடி வசதிகள்'... செம குஷியில் பயணிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புறநகர் ரயிலில், குளிர் சாதன வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்ய இருப்பதாக தென்னக ரயில்வேயின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்துவது சென்னை புறநகர் ரயில் சேவையை தான். இது சென்னை மக்களின் பயணத்திற்கு உயிர் நாடியாகவே திகழ்கிறது என கூறலாம். இருப்பினும் இந்த சேவையில் சில சிக்கல்களும், பிரச்சனைகளும் இருப்பதாக பயணிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.
இதனிடையே புறநகர் ரயிலில் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதால் விபத்திலும் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தென்னக ரயில்வே சார்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜரானார்.
அப்போது அவர், 'சென்னை புறநகர் ரயிலில் குளிர் சாதன வசதி, தான் இயங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வந்துருக்கு.. கொஞ்சம் வர்றீங்களா?'... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!
- ‘இந்தியாவிலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..
- ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே தவறி விழுந்த குழந்தை..! நெல்லை அருகே பரபரப்பு..!
- ‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’!
- இந்தியாவுலேயே.. இதாங்க ரொம்ப 'வொர்ஸ்ட்' ஸ்டேஷன்.. 'சென்னை'க்கு ஏற்பட்ட தலைகுனிவு!
- 'ஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ்'...'எங்க மனசுக்கு ரொம்ப நெருக்கம்'... நெகிழ்ச்சியில் பயணிகள்!
- ‘இந்த ரயில் காலதாமதமானால்’... ‘பயணிகளுக்கு இழப்பீடு’... 'ஐஆர்சிடிசி புதிய திட்டம்'!
- ‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'!