‘தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு’.. முன்பதிவு எப்போ..? விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு சிறப்பு ரயில்சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தென்னக ரயில்வே நெல்லை, தூத்துகுடி மற்றும் எர்ணாகுளத்து சிறப்பு ரயில்சேவையை அறிவித்துள்ளது. அதில் எர்ணாகுளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு  (திருச்சூர், பாலக்காடு, கோவை, சேலம் மார்க்கமாக) அக்டோபர் 24ம் தேதி 7:40 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படும். அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு அக்டோபர் 25ம் தேதி மாலை 3:10 மணியளவில் சுவிதா சிறப்பு ரயில் புறப்படும்.

மேலும் நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு (விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் மார்க்கமாக) அக்டோபர் 25ம் தேதி இரவு 9:40 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு (விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மார்க்கமாக) அக்டோபர் 26ம் தேதி இரவு 7:20 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படும்.

இதில் முன்பதிவில்லா தாம்பரம்-கொச்சுவேலி இடையே (விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் மார்க்கமாக) இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 26ம் தேதி காலை 7:45 மணியளவில் புறப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (25.10.2019) காலை 8 மணிக்கு தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

INDIANRAILWAYS, TRAIN, SOUTHERNRAILWAY, DIWALI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்