'அடுத்த 4 நாட்கள்’... ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்’... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இடையில் சில நாட்கள் வறண்ட வானிலையும் நிலவியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வட மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு நாளை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்