அமைச்சர் பெயர் சொல்லி.. கோடிக்கணக்கில் மோசடி.. விடிய விடிய பெண் சிறைபிடிப்பு.. கடைசியில் ட்விஸ்ட்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சூலூர் : வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் விடிய விடிய காவல் நிலையத்தில் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சூலூர் அப்பநாய்க்கன்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 35). இவரது முதல் கணவரின் பெயர் சுரேஷ். ராமநாதபுரம் மாவட்டத்தில், காவல்துறையில், முதல்நிலைக் காவலராக இருந்துள்ளார்.

சுரேஷை விவாகரத்து செய்த சவுமியா, பின் கோவை தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும், அப்பநாய்க்கன்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அந்த கல்லூரி பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ விரும்புல... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்!

அமைச்சர் பெயரில் மோசடி

இந்நிலையில், அமைச்சரை தனது உறவினர் என கூறிய சவுமியா, அவர் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறியுள்ளார். இவரின் ஆசை வார்த்தையால், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். தனது பகுதியில் உள்ளவர்களிடம் இப்படி ஏமாற்றி, கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகளையும் வாங்கியுள்ளார்.

தலைமறைவு

பின்னர், திடீரென சவுமியா தலைமறைவாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, சவுமியா வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததன் பெயரில், அப்பநாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்சா என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சவுமியா, சூலூர் பகுதியிலுள்ள லாண்டரி கடைக்கு துணி வாங்க வேண்டி வந்துள்ளார்.

எஸ்கேப் ஆன சவுமியா

சூலூர் பகுதியில் சவுமியா இருக்கும் தகவலை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அங்கு திரண்டதாக தெரிகிறது. தன்னைச் சூழ்ந்து வருவதை அறிந்து, சுதாரித்துக் கொண்ட சவுமியா, உடனடியாக அங்கிருந்து நழுவி, காரில் ஏறித் தப்பித்துச் சென்று விட்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சவுமியாவை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆபிசுக்கு பறந்த அன்னப்பூரணி.. கொடுத்த பரபரப்பு புகார்

போலிஸ் பாதுகாப்பு

பின்னர், பாப்பநாய்க்கன் பாளையம் பாலுந்தரம் சாலை அருகே சவுமியாவை மடக்கிப் பிடித்துள்ளனர். அந்த நேரத்தில், அங்கு வந்த ரோந்து போலீசார், சாலையில் தகராறு நடப்பதைக் கண்டு கொண்டனர். பின்னர், அனைவரையும் பந்தய சாலை காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடந்த இடம் சூலூர் எல்லையில் வருவதால், போலீஸ் பாதுகாப்புடன், சவுமியாவை சூலூர் காவல் நிலையம் கொண்டு வந்து இரவு நேரத்தில் ஒப்படைத்தனர்.

கோரிக்கை

அந்த நேரத்தில், அவருக்கு பாதுகாப்பாக இரண்டு வழக்கறிஞர்களும் உடன் இருந்தார்கள். அப்போது, சூலூர் காவல் நிலைய ஆய்வாளரிடம், சவுமியாவுடன் வந்த வழக்கறிஞர்கள், 'இரவு நேரம் என்பதால், இளம்பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. இதனால், சவுமியாவை எங்களுடன் அனுப்புங்கள். விசாரணைக்காக ஆஜர்படுத்துகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

விடிய விடிய சிறைபிடிப்பு

இதற்கு ஆய்வாளரும் அனுமதி அளித்ததாக தெரிகிறது. ஆனால், சவுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சவுமியா காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லாத படி, காவல் காத்ததாகவும் கூறப்படுகிறது. வாடகை டாக்சி மூலம், சவுமியா கிளம்பிச் செல்ல மூன்று முறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது. விடியற்காலை 4 மணி வரை அவர்கள், சவுமியாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

ஆம்புலன்சில் தப்பிய சவுமியா

இதனைத் தொடர்ந்து, திடீரென 108 ஆம்புலன்சுக்கு அழைத்த சவுமியா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்சில், ஏறி வழக்கறிஞர்களுடன் அங்கிருந்து தப்பி விட்டார் சவுமியா. இதனால், செய்வதறியாமல் திகைத்து போய் நின்ற பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்றனர்.

ஏராளமான வழக்குகள்

விடிய விடிய காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அமைச்சர் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபடும் சவுமியா, அமைச்சருடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்களை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் மீது ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மோசடி வழக்குகள் உள்ளது. பலமுறை சிறைக்கும் சென்றவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

SOOLUR, FRAUD, MINISTER, சூலூர், அமைச்சர், இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்