எங்க மண்ணுல எப்போ கால் வைக்க போறோம்...! 'காத்திருந்த தமிழக மாணவர்கள்...' 'எதிர்பாராத நேரத்தில்...' - நடிகர் சோனு சூட் செய்த மிகப்பெரிய உதவி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய தொடங்கிய காலம் முதல் துன்பத்தில் இருப்பவர்களை கண்டறிந்து தன்னார்வத்துடன் உதவி செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
சோனு சூட் ஒரு குறிப்பிட்ட பகுதி என சுருக்கி கொள்ளாமல் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி நடைப்பயணமாகவே சென்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வேன்களை ஏற்பாடு செய்தது முதல் வேலை பறிபோன என்ஜினீயர் பெண்ணுக்கு வேலை அளித்தது வரை அவர் செய்த உதவிகள் ஏராளம்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் சிக்கி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு வர செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்த மாணவர்கள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அனைவரும் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா கோர பிடியில் சிக்கி தவித்து மீண்டெழும் மக்கள், தங்களின் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வடமாநிலங்களில் ஒரு சிலர் தாங்கள் புதிதாக தொடங்கும் கடைகளுக்கு சோனு சூட் அவர்களின் பெயரை வைத்தும் தங்களது நன்றி கடனை செலுத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காய்கறி விற்ற ஐ.டி பெண்ணுக்கு உதவியதை அடுத்து’... ‘ஒரு படி மேலே’ போய் சோனு சூட்டின் ‘நெகிழவைத்த’ அறிவிப்பு!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- '5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்...' 'எங்க வீட்டு குழந்தை மாதிரி தானே...' - போலீசாரின் மனிதாபிமானம்...!
- 'கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி பிரதிபாவுக்கு இருந்த பிரச்சனை!'.. 'பிரேத' பரிசோதனையில் பரபரப்பு 'திருப்பம்'!
- 'விடுதியில் மர்மமாக இறந்த'.. 'மருத்துவக் கல்லூரி' மாணவிக்கு 'கொரோனா' தொற்று 'இல்லை'.. வெளியான பரிசோதனை முடிவுகள்!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- 'கொரோனாவைத் தடுக்க'... 'வெளிநாட்டிற்கு சென்ற'... 'இந்திய மருத்துவக் குழு'... காரணம் இதுதான்!
- ‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...
- 'எங்கள தனியா வச்சா அதனால என்ன?'... 'மருத்துவ முகாமில் சும்மா அதிரவிட்ட'... ‘சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்’!
- ‘சீனாவில் இருந்து திரும்பிய’... ‘மருத்துவ மாணவர்கள்’... ‘அங்க என்ன நடக்குது’... ‘கூறும் உண்மை இதுதான்’!