திருவண்ணாமலை அருகே ஜாமீனில் எடுத்த தந்தையின் தலையை வெட்டி, கொடூரமாக மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபால், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவரது மகன் கார்த்திகேயனுக்கும், மருமகள் ராஜேஸ்வரிக்கும் திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், தனது 3 மாத பச்சிளம் குழந்தையை 3 துண்டுகளாக வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர், 10 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த, தனது தந்தையின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த கார்த்திகேயன், வாணபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஜாமீனில் எடுத்த தந்தையையே, மகன் கொலை செய்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஜலசமாதி அடைந்த தமிழ்ச்சிறுவன்’.. பரிசோதனை செய்த ஆட்சியர்.. தொடரும் மர்மம்.. வீடியோ!
- 'பாதி எரிந்த நிலையில் பிணமாக தொங்கிய மாணவி'...நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்!
- 'திரும்பத் திரும்ப அதையே சொல்ற?'.. பெண்ணை கொன்று பார்சல் செய்து வீசிய காதலன்!
- ‘தினமும் நைட்ல டிவி-மூவிஸ்..செல்போன்-வீடியோஸ்’.. மனைவியின் செயலால் ஆத்திரத்தில் கணவர் எடுத்த முடிவு!
- ‘பெண்ணின் நகத்தில் இருந்த ரத்தம்’..‘இரட்டை கொலையில் பிடிப்பட்ட புதுமாப்பிள்ளை’.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!
- இளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..
- 'ரொம்ப தொல்ல கொடுக்குறானே'...'பெற்ற மகனையே தீர்த்து கட்டிய தாய்'...வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
- 'நீ யாருக்கும் கிடைக்க கூடாது'...'பொள்ளாச்சி மாணவி' கொலையில்...அதிரவைக்கும் காரணம்!
- பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: மாயமான கல்லூரி மாணவி கொலை.. பதறவைக்கும் சம்பவம்!
- 'உயிருக்கு உயிரா காதலிச்சேன்'...ஆனா?...'காதலியை எரித்த'...'காதலனின் அதிரவைக்கும் வாக்குமூலம்'!