‘மிரண்டு முட்டித் தூக்கிய காளை’!.. ‘சரிந்த குடல்’! அப்பாவை காப்பாற்ற போராடிய மகன்..! மிரள வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காளை முட்டியதில் அதன் உரிமையாளர் குடல் சரிந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மிரண்டு முட்டித் தூக்கிய காளை’!.. ‘சரிந்த குடல்’! அப்பாவை காப்பாற்ற போராடிய மகன்..! மிரள வைத்த சம்பவம்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஐயர் மடம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவர் அருகில் உள்ள காட்டில் தனது காளை மாட்டை மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மிரண்ட காளை மணிவேல் மீது சீறி பாய்ந்துள்ளது. அவரை காளை கொம்பால் முட்டியதில் குடல் சரிந்து படுகாயம் அடைந்துள்ளார்.

தகவலறிந்து மணிவேலின் மகன் பூபதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு முட்டிக்கொண்டிருந்த காளையிடம் இருந்து தனது தந்தையை மீட்க பூபதி போராடியுள்ளார். ஒருவழியாக கயிறு மூலம் காளையை பிடித்து தந்தையை காப்பாற்றியுள்ளார். இதனை அடுத்து உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காளையிடமிருந்து சாதூர்யமாக தந்தையை, மகன் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, FATHER, SON, BULL, DINDIGUL, INJURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்