என்ஜினியரிங் படிக்கும்போதே அந்த பழக்கம் இருந்திருக்கு.. சிவகங்கை அருகே நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
"போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செல்வம், சொந்த ஊருக்க வந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
என்ஜினியரிங் படித்த மகன்
செல்வத்துக்கு ஒரு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தின் மூலம் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இரண்டாவது மகனான முகுந்தனை (வயது 22) என்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். ஆனால் முகுந்தனுக்கு படிக்கும் போதே குடி பழக்கம் இருந்து உள்ளது. இதை அறிந்த செல்வம் மகனை கண்டித்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது படிப்பை முடித்த முகுந்தன் கட்டட வேலை செய்து வருகிறார்.
மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை
இந்த சூழலில் நேற்று வேலையை முடித்து வந்த முகுந்தன் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது கூடுதலாக மது வாங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் செல்வம் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற தனது தாயயையும் முகுந்தன் தள்ளிவிட்டு உள்ளார்.
மகன் கைது
இதனை அடுத்து சண்டையை தடுத்து நிறுத்துவதற்காக அருகில் உள்ளவர்களை அழைத்து வருவதற்காக முகுந்தனின் தாய் சென்றுள்ளார். இந்த சமயத்தில் முகுந்தன், தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகுந்தனை கைது செய்தனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் மகனாவே இருந்தாலும் அவன் செஞ்சது பெரிய தப்பு.. லேப்டாப்பில் இருந்த ஆதாரம்.. மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்த அப்பா..!
- மகன் மப்புல இருக்குறப்போ.. அப்பா கொடுத்த அட்வைஸ்.. வெறியான மகன் செய்த கொடூரம்
- டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்.. நேரில் சென்றால் அது பொண்ணே இல்ல.. இளைஞரின் விபரீத ஆசை
- நீல நிறமாக மாறிய இட்லி மாவு.. பெத்த மகனே இப்படி பண்றது ஏத்துக்க முடியல.. வேதனையில் அப்பா, அம்மா
- வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய 'தம்பி'
- உங்க லாட்ஜ்ல குடிச்ச 'ஜூஸ்' தான் எல்லாத்துக்கும் காரணம்.. பக்கா பிளானோடு இருக்குறது தெரியாம ஆஸ்பத்திரிக்கு கிளம்பிய லாட்ஜ் ஓனர்
- ஒரே ஒரு கிரிக்கெட் பந்தினால்.. ஒட்டுமொத்த ஊரிலும் வெடித்த கலவரம்.. புழுதி பறக்க நடந்த சண்டை
- வீட்டை கிளீன் பண்ணும்போது கிடச்ச பழைய சூட்கேஸ்.. உள்ள எதோ விளையாட்டு பொருள் இருக்குன்னு நெனச்சோம்.. ஆனா...! சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன தம்பதி..!
- நீ என் பொண்ணு இல்லம்மா.. அப்பாக்கே இப்போ தான் தெரிஞ்சிது.. 30 வருஷம் முன்னாடி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம்.. தெரிய வந்த உண்மை
- அம்மாவ தப்பா பேசிட்ட இல்ல... நடுராத்திரி 2 மணிக்கு செல்போன் சார்ஜரை எடுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்