‘மனைவிய என்கூட அனுப்ப மாட்டீங்களா?’... ‘ஆத்திரத்தில் மாமியாரை அறைந்த மருமகன்’... ‘மாமனாரின் வெறிச்செயல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் குடும்ப தகராறில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன். இவரும், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி- மீனா தம்பதியின் மகள் ஷாலினியும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக ஷாலினி இருந்த நிலையில், சரியாக வேலைக்கு செல்லாத கணவர் ராஜேந்திரன், மனைவியை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாலினிக்கு பிரசவ வலி வராததால், மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது. இதனால், ஷாலினி தமது சகோதரி வீட்டுக்கு, தாயருடன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, அங்கு சென்ற ராஜேந்திரன், மனைவியை தம்முடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஷாலினியை விட மறுத்த அவர், சரியாக வேலைக்கு செல்லாதவனுடன் தன் மகளை அனுப்ப மாட்டேன் என கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் ராஜேந்திரன், தனது மாமியாரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த மாமனார் தங்கமணி, மருமகனை துரத்தி சென்று, தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். அந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளார். மாமியார் மீனா, தங்கமணியை தடுக்க முயன்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருமகனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மாமனார் தங்கமணியை தேடி வருகின்றனர். மாமியார் மீனாவும் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’
- பட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..’
- 'என்ன மாட்டிவிட்டுடான்'.. 'அதான் தனியே அழச்சுட்டு போய்'.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'மனைவி, மகளை கிண்டல் செய்ததை'... 'தட்டிக் கேட்டதால் நேர்ந்த கோரம்'... 'இளைஞர்களின் வெறிச் செயல்'!
- ‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’
- 'கொதிக்கும் எண்ணெய்.. மிளகாய்ப்பொடி.. சுத்தியல்'.. 'ஒருவழியா முடிச்சாச்சு'.. கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவி துணிகரம்!
- ‘நடந்து சென்றபோது நேர்ந்த பயங்கரம்’... ‘தங்கையின் கணவருக்கு’... ‘மைத்துனர்களால் நடந்த கொடூரம்’!
- ‘குளக்கரையில் சிதைக்கப்பட்ட நிலையில்’ கிடைத்த சடலம்.. ‘ஆணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’
- ‘அப்பா, இவுங்க எதையோ குடிக்கச் சொல்றாங்க’... 'மகள் செய்த ஃபோன்'... ‘பதறிய தந்தை’... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!