இனிமேல் கடையெல்லாம் காலை 10 மணிக்கே க்ளோஸ்...! 'தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்...' - நாளை (15-05-2021) முதல் அமலுக்கு வருகிறது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை முதல் மேலும் சில கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் கடையெல்லாம் காலை 10 மணிக்கே க்ளோஸ்...! 'தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்...' - நாளை (15-05-2021) முதல் அமலுக்கு வருகிறது...!

ஆனால் பொதுமக்கள் பலர் ஆபத்தை உணரமால் வெளியே சுற்றி திரிவது வழக்கமாக இருந்தது. இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை (15-05-2021) முதல் மேலும் சில கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அறிவுக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

அ) நாளை முதல் தேநீர் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆ) மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்.

இ) கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வெண்டும்.

ஈ) பூ, பழங்கள், காய்கறிகள் விற்கும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை.

உ) ஞாயிறு முழு ஊரடங்கு மே 23 வரை தொடரும்.

ஊ) மின் வணிக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி.

எ) மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும்.

ஏ) மீன், இறைச்சிக் கடைகளை பல்வெறு இடங்களுக்கு மாற்ற மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்