'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் வீட்டின் ஏசிக்குள் சுமார் 3 மாதங்கள் தங்கியிருந்த பாம்பினை வனதுறையினர் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நலத்துறையில் பணிபுரிந்து வரும் புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஏழுமலை என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பிளிட் டைப் ஏசியில்தான் இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏழுமலை ஏசியை, ரிமோர்ட் மூலம்  இயக்க முயற்சித்துள்ளார். அப்போது ஏசியில் இருந்து உஷ் என்று சத்தம் வந்ததைக் கேட்டு ஏழுமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பயத்தில் ஏழுமலை ஏசியை நிறுத்தியுமுள்ளார்.

பின்னர் ஏ.சி.மெக்கானிக்கை அழைத்து சரிசெய்யும்படி கூறியுள்ளார். அதற்காக ஏசி மெக்கானிக் ஏசியை கழட்டும்போதுதான் சுமார் 2 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஏசிக்குள் நெளிந்ததை அனைவரும் பார்த்து பதறியுள்ளனர். பின்னர் வனத்துறை ஊழியர் கண்ணதாசன் அங்கு விரைந்து பாம்பினை நீண்ட நேரமாக போராடி, காயமின்றி எடுத்துச் சென்று பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவிட்டார்.

ஏசியின் பின்புறத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட பைப் லைனை அமைத்து பின், அந்த ஓட்டையைச் சரிசெய்யாததால் அருகில் இருந்த மரத்தில் இருந்த பாம்பு அவ்வழியே வந்துள்ளது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், 3 பாம்புத்தோல்களும் அந்த ஏசியில் இருந்துள்ளன.

இதைவைத்துப் பாருக்கும்போது சுமார் 3 மாதங்கள் அந்த பாம்பு இரைதேட மட்டும் வெளியில் சென்றும், மற்ற நேரங்களில் ஏசிக்குள் வாடகையின்றி ஓசியில் குடியிருந்துள்ளது புலப்படுகிறது.

BIZARRE, SNAKE, PUDUCHERRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்