ஷு-க்குள்ள கேட்ட சத்தம்.. வீட்டை க்ளீன் பண்ணப்போ தெரிய வந்த உண்மை.. ஆடிப் போன பெற்றோர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்களை நாம் பார்க்கும் போது அடுத்த நொடியே ஒரு வித பதற்றம் நம்மை சுற்றி உருவாகும்.

Advertising
>
Advertising

Also Read | மனைவிகள் சம்மதம் வாங்கியே '5' கல்யாணம்.. ஒரே வீட்டுல 62 பேர்.. மகிழ்ச்சியாக வாழும் நபர்!!..

அது மட்டுமில்லாமல், நம்மை சுற்றி உள்ள விஷயங்களைக் கூட ஒருமுறை கவனிக்க வேண்டும் என்று கூட தோன்றும்.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி, பார்ப்போர் பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், செம்மண்டலம் பகுதியை அடுத்த ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை என்பதால், தனது வீட்டை சுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளார் அசோகன்.

அந்த சமயத்தில், குழந்தைகளின் பள்ளி ஷூக்களில் இருந்து சத்தம் ஒன்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஷூவை கவனித்த அசோகனுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த ஷூவுக்குள் குட்டி பாம்பு இருந்ததை கண்டு அசோகன் அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக, பாம்பு பிடி வீரரான செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்தார் அசோகன்.

தொடர்ந்து, அசோகன் வீட்டிற்கு வந்த செல்லா, ஷூவிற்குள் இருந்த பாம்பை பக்குவமாக வெளியே எடுத்துள்ளார். மேலும், நல்ல பாம்பு என்பது தெரிய வந்த நிலையில், குட்டி நல்ல பாம்பு என்றால் கூட, அதற்கும் விஷத் தன்மை உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, அதனை லாவகமாக கையாண்ட செல்லா, அதனை பாட்டில் ஒன்றில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றதாகவும் கூறபடுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது பார்க்கும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. விடுமுறை என்பதால், அசோகனின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படவில்லை என்றும், ஒரு வேளை பள்ளிக்கு செல்ல வேண்டிய சமயம் என்றால் என்ன ஆகி இருக்கும் என்றும் சிலர் பீதியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல, பள்ளிக்கு செல்லும் முன் மிகவும் கவனமாக குழந்தைகளை ஷூ அல்லது காலணிகளை அணிய வேண்டும் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், இப்படி தினசரி உபயோகிக்கும் காலணிகளை இது போல உயிரினங்கள் நுழையாத வகையில், பாதுகாப்பாக வீட்டில் வைக்கவும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read | இந்தியா டீம் Whatsapp குரூப் மூலமா இளம் வீரருக்கு தெரிஞ்ச விஷயம்.. பல நாள் உழைப்புக்கு கெடச்ச அதிர்ஷ்டம்!!

SNAKE, SHOES, CHILDREN SHOES, PARENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்