டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டியை திறந்த ஊழியர்... காத்திருந்த அதிர்ச்சி... அலறியடித்து ஓட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை சரவணம்பட்டி எலைட் டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டிக்குள் பாம்பு இருந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டியை திறந்த ஊழியர்... காத்திருந்த அதிர்ச்சி... அலறியடித்து ஓட்டம்!
Advertising
>
Advertising

கோவை சரவணம்பட்டியில் தமிழக அரசின் எலைட் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.இங்கு உயர் ரக மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு குடிமகன்கள் அதிக அளவில் வந்து மது வாங்கி செல்வது வழக்கம். வசதியான பார்களில் பீர்கள் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

snake found in liquor box at tasmac in coimbatore

அண்மையில் கடையில் பணியில் இருந்த ஊழியரில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியை திறந்துள்ளார். அப்போது,பெட்டிக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தைரியமாக பெட்டிக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்துள்ளார்.

பின்னர், டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ACCIDENT, டாஸ்மாக், டாஸ்மாக் ஊழியர், மதுபானபெட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்