அமெரிக்காவை அசரவைத்த தமிழர்கள்.. பத்மஸ்ரீ விருதுபெறும் வடிவேல் கோபால், மாசி சடையன்.. யார் இவர்கள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

மருத்துவம், கல்வி, இலக்கியம், கலை உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறும் நபர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் விலங்குகள் நல பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என பொதுவாக சொல்வதுண்டு. அந்த வகையில் எளிதில் மக்கள் அச்சம் கொள்ளும் விலங்காக பாம்புகள் கருதப்படுகின்றன. மக்களுக்கு தொந்தரவு நேரும்பட்சத்தில் பாம்புகளை பிடிக்க வனத்துறை முயன்று வருகிறது. அதே நேரத்தில் போதிய உபகரணங்கள் மற்றும் இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை என்றால் பெரும் ஆபத்தையும் இந்த பணி ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகிய இருவரும் பல வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய பாம்பு பிடிக்கும் திறமையை நிரூபித்து வந்திருக்கின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மலைப் பாம்புகளின் தொல்லை அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த நினைத்த அதிகாரிகள் உலகெங்கிலும் உள்ள பாம்பு பிடி வீரர்களை வரவழைத்தனர். அப்படி இந்தியாவிலிருந்து சென்ற வடிவில் கோபால் மற்றும் மாசி சடையன் இரண்டு மாதம் அங்கே தங்கி இருந்து 33 மலைப்பாம்புகளை பிடித்து அனைவரையும் சிக்கு முக்காட செய்தனர். இதுவரையில் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று பல கடுமையான விஷங்களை கொண்ட பாம்புகளை பிடித்திருக்கும் இந்த இருவரும் பாரம்பரிய முறையில் இதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

VADIVEL GOPAL, MASI SADAYAN, PADMA SRI

மற்ற செய்திகள்