'நிஜமா இது ஒர்ஜினல் முடிங்க...' அப்படியா...? 'டெஸ்ட் பண்ணிடுவோம்...' 'டோப்பாவுக்குள் இருந்த பார்சல்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று (21-03-2021) துபாய், சாா்ஜாவிலிருந்து சிறப்பு விமானம் சென்னை விமான நிலையம் வந்திறங்கியது.

அப்போது நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் சென்னை, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், சேலம்  மாவட்டங்களை சோ்ந்த 7 பயணிகள் ரூ.2.53 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் பேஸ்ட் மற்றும் வெளிநாட்டு பணத்தை வித்தியாசமாக தலையில் அணியும் டோப்பா (விக்குகள்) மற்றும் காலுறைகளில் (சாக்ஸ்கள்) மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சென்னையிலிருந்து சாா்ஜாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சோ்ந்த 4 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.

                    

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் சென்னை விமானநிலையத்தில் 11 பயணிகள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.2.77 கோடி மதிப்புடைய தங்கம்  மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                               

சென்னை விமான நிலையத்தில் பேஸ்ட் மற்றும் தலையில் தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் பொந்தில் சிக்கிய எலிபோல் மாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்