'எவ்வளவோ ட்ரிக்ஸ் பார்த்துட்டோம்...' 'ஆனா இது புதுசு...' 'இருந்தாலும் ரொம்ப தான் மன தைரியம்...' - வசமா ஏர்போர்ட்ல சிக்கிய மனிதர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விதவிதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததை தாண்டி தற்போது

'எவ்வளவோ ட்ரிக்ஸ் பார்த்துட்டோம்...' 'ஆனா இது புதுசு...' 'இருந்தாலும் ரொம்ப தான் மன தைரியம்...' - வசமா ஏர்போர்ட்ல சிக்கிய மனிதர்...!

சமீபகாலமாக சட்டவிரோதமாக தங்க கடத்தல்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் துபையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த நபர் முகக்கவசத்தில் தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 40, ஃபிளை துபை விமானம் மூலம் துபையில் இருந்து சென்னை வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வெளியே செல்ல முயன்ற அப்துல்லாவை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் பதட்டத்துடன் காணப்பட்ட அப்துல்லா, பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக் கவசத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

அதன்பின் அவரின் முகக்கவசம் கத்தரித்து திறக்கப்பட்டதில், இரண்டு முகக்கவங்களை ஒன்றாக இணைத்து தைத்திருந்ததும், அவற்றின் நடுவே தங்கப் பசை வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ 2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரின் பையிலும், ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐ போன்கள் 8, பயன்படுத்திய மடிக் கணினிகள் 9, 2 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 8.2 லட்சம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முகமது அப்துல்லா மொத்தம் ரூ 11.13 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை கடத்தி கொண்டுவந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்