‘பயணிகள் வசதிக்காக ஸ்மார்ட் வாட்ச்’.. ‘சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ஐடியா’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் வசதிக்காக புதிதாக ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிதாக ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக மெட்ரோ நிர்வாகம் டைட்டன் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிப் பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் டிக்கெட் எடுக்கக் காத்திருக்காமல் பயணிகள் எளிதில் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியும்.

பயணிகள் ரூ.1000 செலுத்தி இந்த கைக்கடிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும், நுழைவுப் பாதையில் கைக்கடிகாரத்தை காண்பித்தாலே கதவு திறந்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. ரூ.1000 முதல் ரூ1500 வரை பல்வேறு மாடல்களில் கிடைக்கும் இந்தக் கடிகாரத்தை எப்படி ரீசார்ஜ் செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

CHENNAI, METRO, TRAIN, TICKET, SMARTWATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்