'நமக்காக வேல பாக்குறவங்க கூட' ... 'கொண்டாடணும்னு நெனச்சேன்' ... 'பிறந்தநாளை' சிறப்பாக கொண்டாடிய 'சிறுவன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வர்கீஸ் என்ற சிறுவன். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுத்தம் செய்த சுகாதார பணியாளர்கள் போன்றவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை சிறுவன் வர்கீஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது சாலையோரம் ஆதரவில்லாமல் இருந்தவர்களுக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து அந்த பகுதியில் இருந்த மக்கள் பலரின் பாராட்டை சிறுவன் பெற்றுள்ளார்.

ஆண்டு தோறும் சிறுவன் வர்கீஸ் தனது பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகள் அல்லது ஆதரவற்றோர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து கொண்டாடும் நிலையில் இந்த முறை அதற்கான வாய்ப்பு அமையாததால் நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாட அந்த சிறுவன் முடிவு செய்து அதனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்