'காலியாகும் எம்.பி. பதவிகள்'... 'அடுத்ததாக ராஜ்ய சபாவில்'... 'ஒலிக்கப் போகும் 6 தமிழக குரல்கள்'... 'போட்டியே இல்லாமல் யார் யார் தேர்வு?'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 6 மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து கடந்த 2014-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதையடுத்து, அந்த இடங்களை நிரப்புவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியிட்டனர். அதேபோல் திமுக சார்பில், அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிட்டனர். 3 சுயேட்சைகளும் போட்டியிட்டனர். 3 சுயேச்சை வேட்பாளர்களுக்கு எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் 6 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். போட்டியின்றி தேர்வாகியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால், வருகிற 26-ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் நடைபெறாது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சபாஷ்... சரியான போட்டி!'... 'எடப்பாடி Vs ஸ்டாலின்'... '2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார்!?'... சட்டமன்றத்தை உலுக்கிய... காரசார விவாதம்!... தமிழக அரசியலில் பரபரப்பு!
- அச்சுறுத்தும் ‘கொரோனாவை’ கட்டுப்படுத்த... ‘ஐடியா’ இருந்தால் ‘ஷேர்’ செய்யலாம்... ‘பரிசுத்தொகை’ அறிவித்த மத்திய அரசு...
- அறிவாலயத்தை அலங்கரிக்கப் போகும்... 'அடுத்த பொதுச் செயலாளர் யார்!?'... திமுக-வில் பரபரப்பு!
- 'கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுரலாம்' ... 'ஆனா அவங்க கொரோனாவ விட டேஞ்சர்' ... தமிழக அமைச்சரின் கிண்டல் பேச்சு!
- '214'-வது முறையாக 'வேட்புமனு' தாக்கல்... 3 முறை 'லிம்கா' சாதனை...விரைவில் 'கின்னஸ்'... "பட்... எனக்கு தோல்விதான் முக்கியம்..."
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இட ஒதுக்கீடு குறித்த ஆர்.எஸ். பாரதியின் சர்ச்சை பேச்சு...விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது... கண்டனத்தை பதிவு செய்த மக்கள் நீதி மய்யம்
- 'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'